சீனாவுக்கு போட்டியாக, சீனாவின் உதவியுடன் இந்திய துறைமுகம்

Iran

சீனா பாகிஸ்தானில் தனது One Road One Belt திட்டத்துக்காக கட்டிவரும் துறைமுகத்துக்கு (Gwadar port) போட்டியாக இந்தியா ஈரானில் ஒரு துறைமுகத்தை, $500 மில்லியன் செலவில், கட்ட தீர்மானித்திருந்தது. ஈரானின் Chabahar என்ற இடத்தில் கட்டப்படும் இந்த துறைமுகத்துக்கு இந்தியா சீனாவின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு உள்ளது.
.
இந்தியா கட்டும் துறைமுகத்துக்கு தேவையான தொழிநுட்ப வசதிகள் இந்தியாவிடம் இல்லை. அதனால் இந்தியா மேற்கு நாடுகளிடம் இருந்து தேவையான நுட்பங்களை பெற திட்டமிட்டு இருந்தது. ஆனால் டிரம்ப் அரசு ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தடை போடலாம் என்ற பயத்தில் பல மேற்கு நாட்டு நிறுவனங்கள் ஈரான் துறைமுக வேலைகளில் பங்குகொள்ள மறுத்துள்ள.
.
துறைமுக கட்டுமானத்தில் முன்னணி வகிக்கும் ஐரோப்பிய பொறியியல் நிறுவனங்களான Liebherr, Konecranes, Cargotec, ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு இந்தியாவின் துறைமுக கட்டுமானத்தில் பங்குகொள்ளாது தவிர்த்து உள்ளன.
.
கடந்த செப்டெம்பர் மாதம் முதல் குறைந்தது 3 தடவைகள் இந்தியா நுட்பங்களை பெறும் ஒப்பந்தகளுக்கான அழைப்புகளை செய்திருந்தும் இன்றுவரை தகுந்த நிறுவனங்கள் எதுவும் முன்வைத்திருக்கவில்லை.
.
இந்நிலையில் இந்தியா தற்போது சில உபகாரங்களை சீனாவின் ZPMC என்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது.
.

கட்டுமானத்து பயன்படுத்தவுள்ள சில கிரேன்களை (crane) கட்டவே சுமார் 2 வருடங்ககள் தேவையாம்.
.