சீனாவுக்கு விமான இயந்திரம் விற்க அமெரிக்கா தடை?

GE_Engine

ரம்ப் அரசு அமெரிக்காவின் General Electric (GE) தனது விமான இயந்திரங்களை சீனாவுக்கு விற்பனை செய்வதை விரைவில் தடை செய்ய ஆலோசனை செய்கிறது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் அமெரிக்க அரசோ, GE நிறுவனமோ அல்லது இயந்திர தயாரிப்புடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களோ இந்த விசயம் தொடர்பாக கருது கூற மறுத்துள்ளன.
.
சீனாவின் புதிய அகலம் குறைந்த (narrow body) பயணிகள் விமானமான Comac C919 விரைவில் சேவைக்கு வர உள்ளது. Comac (Commercial Aircraft Corp of China) தயாரிக்கும் இந்த விமானத்துக்கு அமெரிக்காவின் GE நிறுவனத்தின் CFM LEAP-1C வகை இயந்திரமே (engine) பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை சீனா ரஷ்யாவுடன் இணைந்து C929 என்ற அகன்ற (wide body) விமானத்தை தயாரிக்கும் பணியையும் ஆரம்பித்து உள்ளது.
.
சீனாவின் பயணிகள் விமான தயாரிப்பு வளர்ச்சியும் தற்போது அமெரிக்காவை பயம் கொள்ள வைத்துள்ளது. இதுவரை அமெரிக்காவின் Boeing விமானங்களும், ஐரோப்பாவின் Airbus விமானங்களுமே பயணிகள் விமான உலகை ஆள்கின்றன. சீனாவிடம் இருந்தான புதிய போட்டியை அமெரிக்கா விரும்பவில்லை.
.
அமெரிக்காவின் தானியங்களை சீனா அதிகம் கொள்வனவு செய்யவேண்டும் என்றும், Huawei தொழில்நுட்பம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் கூறும் ரம்ப் அரசு பயணிகள் விமான இயந்திர தடைக்கும், தடை நடைமுறை வரின், ஒரு காரணத்தை கூறும். ஆனாலும் GE இயந்திரம் பொருத்திய அமெரிக்க Boeing விமானங்களை விற்பனை செய்ய விரும்பும் அமெரிக்கா, இயந்திரங்களை தனியே விற்பனை செய்வதை தடுப்பதை நியாயப்படுத்துவது சுலபமானதாக இருக்காது.
.
இந்த தடை தொடர்பாக இந்த மாதம் 28 ஆம் திகதி ரம்ப் அரசு ஆலோசிக்கும்.
.