சீனா மீது ரம்ப் மீண்டும் 130% வரி 

சீனா மீது ரம்ப் மீண்டும் 130% வரி 

அமெரிக்கா இறக்குமதி செய்யும் சீன பொருட்களுக்கு நவம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன் 130% இறக்குமதி வரியை நடைமுறை செய்யவுள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். தற்போது அறவிடப்படும் 30% வரி மேலும் 100% வரியால் அதிகரிக்கப்படுவதால் புதிய இறக்குமதி வரி 130% ஆகிறது.

அத்துடன் இந்த மாத இறுதியில் தென் கொரியா செல்லும் ரம்பும், சீன சனாதிபதி சீயும் முன்னர் கூறியவாறு நேரடியாக சந்தித்து உரையாடார் என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தியால் அமெரிக்காவின் பங்கு சந்தைகளான NASDAQ, S&P 500, DOW ஆகியன வெள்ளிக்கிழமை முறையே 3.5%, 2.7%, 1.9% வீழ்ச்சிகளை அடைந்துள்ளன.

சீனா அமெரிக்காவின் சோயாவை கொள்வனவு செய்யாமை, அருமையான கனியங்களை (rare earths) அமெரிக்காவுக்கு வழங்காமை ஆகியன ரம்பின் விசனத்துக்கு காரணம் ஆகின்றன.

அதே நேரம் ரம்ப் தான் விரும்பியபடி, விரும்பிய நேரம் இறக்குமதி வரிகளை நடைமுறை செய்வதை அமெரிக்க நீதிமன்றம் விரைவில் தடை செய்யும் வாய்ப்பும் உள்ளது.