சீன உதவியுடன் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு

SriLankaSouth

சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் புதியதோர் எண்ணெய் குதத்தை அமைக்கவுள்ளதாக இன்று வெள்ளி இலங்கை அரசு கூறியுள்ளது. இந்த புதிய எண்ணெய் சுத்திகரிக்கும் கட்டுமானம் சுமார் $3 பில்லியன் செலவில் அமைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 116,000 பரல் எண்ணெய்யை நாள் ஒன்றில் சுத்திகரிப்பு செய்யும்.
.
இந்த திட்டத்துக்கு அமெரிக்காவின் குழு ஒன்று உட்பட மொத்தம் மூன்று குழுக்கள் போட்டியிட்டதாகவும், இறுதியில் சீனாவின் குழுவே அந்த உரிமையை வெற்றி கொண்டுள்ளதாகவும் இலங்கையின் Board of Investment அதிகாரி Mangala Yapa தெரிவித்து உள்ளார்.
.
அம்பாந்தோட்டை துறைமுகம் China Merchants Port Holding அமைப்பின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த துறைமுகமும், புதிய எண்ணெய் சுத்திகரிப்பு குதமும் சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் செயல்படும்.
.
இந்த புதிய எண்ணெய் சுத்திகரிப்பு குதத்துக்கு சுமார் 500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
இன்னோர் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் அமைக்கப்பட்டு வருகிறது. அது நாள் ஒன்றில் 100,000 பரல்களை சுத்திகரிப்பு செய்யும்.
.