சீன கடனை அடைக்க மறுக்குமா ரம்ப் அரசு?

US_China

சீனாவிடம் இருந்து பெற்ற $1.1 ட்ரில்லியன் கடனை திருப்பி அடைக்க மறுக்க கரோனாவை காரணம் காட்டலாமா என்று ரம்பும், அவரது ஆலோசகர்களும் ஆராய்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.
.
AIDS, SARS, Ebola என்றெல்லாம் தொற்று நோய்கள் பல்வேறு நாடுகளில் ஆரம்பித்து இருந்தாலும் அந்த நாடுகளை நட்டஈடு செய்ய பணிக்கப்படவில்லை. அந்நிலையில் சீனா கரோனாவுக்கு நட்டஈடு செலுத்த வேண்டும் என்றில்லை.
.
அது மட்டுமன்றி அமெரிக்கா தனது மக்களுக்கு வழங்கிய, மீண்டும் வழங்கவுள்ள பெரும் தொகை உதவி பணங்களுக்கு மீண்டும் சீனாவையே நாடவுள்ளது. முன் கடனை அடைக்க மறுத்து, அதே தரப்பிடம் மேலும் கடன் பெற முனைவதும் சாத்தியம் இல்லை.
.
அமெரிக்காவின் அரச bond களை சீனா பெருமளவில் கொள்வனவு செய்வதுண்டு. அதனால் அந்த bond களுக்கு மதிப்பு அதிகம். ரம்ப் அரசு உக்கிரமாக சீனாவுடன் முரண்டு செய்தால் சீன அமெரிக்காவின் bond கொள்வனவை புறக்கணிக்கலாம் என்று கவலை கொள்கின்றனர் அமெரிக்க பொருளியலாளர். தற்காலங்களில் சீனாவிடம் உள்ள பணம் வேறு எந்த நாட்டிலும் இல்லை.
.
தற்போது ரம்புடன் நிலைத்து உள்ளவர்கள் ரம்பின் குணாதிசயங்களை கொண்டவர்களே. அவர்கள் மேற்படி கருத்தில் இணக்கம் கொண்டாலும், அவர்களுக்கு அப்பால் அமெரிக்காவிலும் மேற்படி கருத்துக்கு ஆதரவு இல்லை.
.