சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தையில் தொடர இணக்கம்

சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தையில் தொடர இணக்கம்

சீனாவின் பல நிறுவனங்கள் DOW, NASDAQ போன்ற அமெரிக்க பங்கு சந்தைகளில் தமது பங்குகளை விற்று முதலீடுகளை பெற்று வந்திருந்தன. ஆனால் அவ்வாறு சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தைகளில் இயங்குவதை அமெரிக்கா நிறுத்த (delist) அறிவித்து இருந்தது.

சீன நிறுவனங்களை அமெரிக்கா புலனாய்வு (audit) செய்ய முடியவில்லை என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ஆனால் புதிய இணக்கப்படி அமெரிக்கா மேற்படி நிறுவனங்கள் மீது சீனா செய்யும் புலனாய்வுகளை பார்வையிட அனுமதி கிடைக்கிறது.

Alibaba, JD.com, NIO Inc, போன்ற பல சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தையில் தமது பங்குகளை விற்பனை செய்து முதலீடுகளை பெறுகின்றன.

China Life Insurance, PetroChina, China Petroleum & Chemical Corp போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவின் delisting அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே அமெரிக்காவை விட்டு வெளியேறி ஹாங்காங் பங்கு சதையில் தமது பங்குகளை விற்பனை செய்கின்றன.