சீன பாதுகாப்பு அமைச்சர் திடீர் இலங்கை பயணம்

ChinaLanka

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Chang Wanquan இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று ஞாயிரு புறப்பட்ட Wanquan நேபாளுக்கும் பயணம் செய்வார். சீன அமைச்சரின் பயணம் சம்பந்தமாக இருநாடுகளும் பெரிதாக செய்திகளை வெளியிடவில்லை.
.
தனது பயணத்தின்போது சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை அரசாங்க உயர் அதிகாரிகள், Defense Staff College அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவார். இவரின் பயண காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாவிடினும், இலங்கை மீது இவர் அழுத்தங்கள் கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
இலங்கை 12 புதிய யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய விரும்பியுள்ள நிலையில், பாகிஸ்தான் தனது JF-17 வகை விமானங்களை கொள்வனவு செய்யும்படி கேட்டுள்ளது. இந்த JF-17 வகை விமானங்கள் சீன-பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு ஆகும். ஆனால் இந்தியா தனது Tejas வகை யுத்த விமானங்களை கொள்வனவு செய்யும்படி இலங்கையை கேட்டுள்ளது. போட்டியாக சீனாவும் தனது யுத்த விமானங்களை முன்வைக்கலாம்.
.

அம்பாந்தோட்டை துறைமுக, வர்த்தகவலைய விவகாரங்களும் இழுபறியில் உள்ளது. சீன அமைச்சர் அவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடக்கூடும்.
.