சீன வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா பயணம்

சீன வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா பயணம்

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்க் ஈ (Wang Yi) இன்று இந்தியா சென்றுள்ளார். அங்கு அவர் பல இந்திய அதிகாரிகளுடன் இன்று வெள்ளி உரையாடி உள்ளார். சீன அமைச்சரின் நோக்கம் இந்திய-சீன உறவை நலப்படுத்துவது என்றாலும், இந்திய எல்லையோரம் உள்ள சீன படைகளின் தொகை இந்தியாவுக்கு இடராக உள்ளது.

சீன அமைச்சரின் திடீர் இந்திய பயணம் நேற்று வியாழன் இடம்பெற்றது. 2020ம் ஆண்டு Ladakh பகுதியில் இடம்பெற்ற சீன-இந்திய இராணுவங்களுக்கு இடையேயான வன்முறைகளுக்கு பின் சீன உயர் அதிகாரி இந்தியா செல்வது இதுவே  தடவை.

சீன அமைச்சரின் பயணத்தை இரு அரசுகளும் இறுதிவரை மறைத்து வைத்துள்ளன. வழமையாக வெளிநாட்டு அதிகாரிகள் இந்திய இராணுவ விமான நிலையங்களுக்கே செல்வர் என்றாலும், சீன அமைச்சர் பொதுமக்கள் விமான நிலையம் மூலமே இந்தியா சென்றுள்ளார்.

யுக்கிரைன் விசயத்தில் சீனாவும், இந்தியாவும் இதுவரை ரஷ்யாவை பகைக்காது உள்ளன. ரஷ்யாவும் ஒரு ரஷ்ய-சீன-இந்திய இராணுவ உறவை கொள்ள விருப்பமாக உள்ளது.

இந்தியாவின் மிக பெரிய வர்த்தக நாடு சீனாவே. 2021-2022 ஆண்டு காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் $95 பில்லியன் ஆக இருந்துள்ளது.