சீன BBC தடைக்கு அமெரிக்கா, ஐரோப்பா கண்டனம்

சீன BBC தடைக்கு அமெரிக்கா, ஐரோப்பா கண்டனம்

பிரித்தானியா அங்கு சீனாவின் CGTN (China Global Television Network) செய்தி சேவையை தடை செய்த பின் பிரித்தானியாவின் BBC சேவையை சீனா வெள்ளிமுதல் தடை செய்து இருந்தது.

அத்துடன் BBC எதிர்பார்க்காத நிலையில் ஹாங் காங்கிலும் BBC தடை செய்யப்பட்டு உள்ளது. அதை மேற்கு எதிர்பார்த்து இருக்கவில்லை. அதனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் விசனம் கொண்டுள்ளன.

நீண்ட காலமாக ஹாங் காங் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்ததால் அங்கு BBC ஒரு முன்னணி செய்தி சேவையாக இருந்து வந்துள்ளது. சீனாவை போலன்றி, ஹாங் காங்கில் அனைத்து மக்களும் இதுவரை BBC சேவையை பெற்று வந்துள்ளனர். அதுவும் தற்போது இடைநிறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது அமெரிக்காவோ, ஐரோப்பாவோ சீனாவின் தீர்மானத்தை மாற்றும் வல்லமை இன்றி உள்ளதால் இந்த விசயமும் தொடரும் ஏனைய பேச்சுவார்த்தைகளில் இன்னோர் பணய பொருளாகும். ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா ஹாங் காங்கும் தற்போது சீனா என்று கூறியே பல தடைகளை ஹாங் காங் மீது விதித்து இருந்தது. ஆனால் BBC விசயத்தில் சீனா வேறு, ஹாங் காங் வேறு என்று வாதிட முனைகிறது.

சீனா தனது செய்தி சேவைகள் அனைத்தையும் ஒரு அணியாக்கி, CGTN சேவையை முற்கால BBC போல் உலக செய்தி சேவையாக்க முனைகிறது.