சீன BRI திட்டத்தில் இணையும் இத்தாலி?

RoadAndBelt

சீனாவின் Belt and Road Initiative (BRI) என்ற பாரிய வர்த்தக வலையமைப்பு திட்டத்தில் இத்தாலியும் இணையவுள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு இத்தாலி இணைந்தால் சீனாவின் இந்த திட்டத்தில் இணையும் முதலாவது G7 நாடக இத்தாலி அமையும்.
.
அதேவேளை இத்தாலியின் இந்த தீர்மானம் அமெரிக்காவை விசனப்படுத்தி உள்ளது. அமெரிக்கா தலைமையில் G7 அமைப்பில் உள்ள ஏனைய 6 நாடுகளும் சீனாவின் Belt and Road திட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றன.
.
இத்தாலி இந்த திட்டத்தில் இணைவது தொடர்பாக தற்போதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும், இணைவு தீர்மானமான பின்னர் சீன ஜனாதிபதி இத்தாலி சென்று கையொப்பம் இடுவார் என்றும் இத்தாலியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். சீன ஜனாதிபதி இந்த மாதம் 22-24 திகதியில் இத்தாலி செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
.
இலங்கையும் சீனாவின் இந்த திட்டத்தில் ஒரு அங்கம்.
.