அமெரிக்கா BYD போன்ற சீன நிறுவனங்கள் தயாரிக்கும் மின்னில் இயங்கும் EV (Electric Vehicle) கார்களுக்கு 100% இறக்குமதி வரியை அறிவித்த உடனே பிரதமர் ரூடோ ஆட்சியில் கனடாவும் மேற்படி கார்களுக்கு 100% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தது. அந்த வரியை நிறுத்தவுள்ளதாக புதிய கனடிய பிரதமர் கார்னி இன்று வெள்ளி அறிவித்துள்ளார்.
கார்னி இரண்டு தின சீன பயணத்தை மேற்கொண்ட பின்னரே இந்த அறிவிப்பை செய்துள்ளார். முதலில் 49,000 சீன EV கார்கள் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் இத்தொகை 70,000 ஆக அதிகரிக்கும்.
பதிலுக்கு சீனா கனடிய பொருட்களுக்கு நடைமுறை செய்துள்ளது வரிகள் சிலவற்றை குறைக்கும். உதாரணமாக கனடாவின் canola seeds களின் வரியை 84% இல் இருந்து 15% ஆக குறைக்கும்.
அமெரிக்க சனாதிபதி ரம்பின் முரண்பட்ட போக்கால் வெறுப்பு அடைந்தே கனடா சீனா பக்கம் பொருளாதாரத்தில் சாந்து உள்ளது. இது ரம்புக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தும்.
