சீன சனாதிபதி சீயுடன் தான் வெள்ளிக்கிழமை உரையாட உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று திங்கள் கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் Madrid நகரில் நலமே முன்னேறுவதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் அடுத்த வர்த்தக பேச்சுக்கள் ஒரு மாதத்தின் பின் வேறு இடத்தில் தொடரும் என்று அமெரிக்க Treasury Secretary Scoot Bessent தெரிவித்து உள்ளார். அப்படியானால் வெள்ளி அறிவிக்கப்பட உள்ள இணக்கம் என்ன என்பது புதிராகவே உள்ளது.
சீனா இவ்வகை அறிவிப்பு எதையும் இதுவரை செய்யவில்லை.
சீன நிறுவனமான TikTok தொடர்பாகவும் இணக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ரம்ப் தெரிவித்து உள்ளார். ஆனால் விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
அமெரிக்காவில் 170 மில்லியன் TikTok பாவனையாளர் உள்ளனர்.
