சுயஸ் கால்வாயில் புதைந்த கப்பல் விடுவிக்கப்பட்டது

சுயஸ் கால்வாயில் புதைந்த கப்பல் விடுவிக்கப்பட்டது

சுயஸ் கால்வாயில் புதைந்த Ever Given என்ற 400 மீட்டர் நீள பெரும் கொள்கலன் கப்பல் உள்ளூர் நேரப்படி திங்கள் பிற்பகல் 3:05 மணியளவில் புதைவில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. இதை விடுவிக்க சுமார் 30,000 சதுர மீட்டர் மணல் அகழப்பட்டு இருந்து. தற்போது Ever Given சுயமாக மிதக்கிறது.

Ever Given புதைவு சுயஸ் கால்வாயை 6 தினங்கள் வழிமறித்து இருந்ததால் அங்கு சுமார் 370 கப்பல்கள் முடங்கி உள்ளன. அவை விரைவில் மீண்டும் தமது பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த புதைவால் உலக வர்த்தகத்துக்கு தினமும் சுமார் $6 பில்லியன் முதல் $10 பில்லியன் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக காப்புறுதி நிறுவனமான Allianz கூறியுள்ளது. இக்கால்வாய் வழியே தினமும் சுமார் 2 மில்லியன் பரல் எண்ணெய் பயணிப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கு முடங்கி இருந்த 20 கப்பல்களில் ருமேனியாவில் இருந்து பயணித்த 130,000 ஆடுகளும் (sheep) முடங்கி இருந்தன. அவற்றுக்கான உணவு மற்றும் நீர் தடுப்பாடுகளும் விரைவில் ஏற்பட இருந்தது. அவையும் பட்டினி மரணத்தில் இருந்து தப்பின.

வேறுபல கப்பல்கள் சுயஸ் கால்வாயை கைவிட்டு ஆபிரிக்காவை சுற்றி செல்ல ஆரம்பித்து உள்ளன. அவ்வழி பயணத்துக்கு மேலதிகமாக சுமார் 9 தினங்கள் தேவை. அத்துடன் எரிபொருள் செலவு மட்டும் தினமும் சுமார் $26,000 ஆல் அதிகரிக்கும்.