சுவிஸ் தூதரக பணியாளரை இலங்கை கைது

Gania

தன்னை இனம் தெரியாதோர் கடத்தி சுவிஸ் தூதரக தவுகளை பறித்தனர் என்று கூறிய சுவிஸ் பணியாளரை இன்று திங்கள் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். Gania Banister Francis என்ற இந்த சுவிஸ் தூதரக பணியாளர் தன்னை கடத்தியதாக கூறியது உண்மை அல்ல என்கிறது இலங்கை புலனாய்வு பிரிவு.
.
கோத்தபாய தமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்படி பணியாளர் பொய் கதையை கூறியதாக போலீசார் கூறி உள்ளனர். தமது விசாரணைக்கு ஆதரவாக CCTV வீடியோ, Uber தவுகள், தொலைபேசி தரவுகள், GPS தரவுகள் ஆகியவற்றை எடுத்துள்ளது இலங்கை அரசு. அவற்றை ஆராய விரும்புகிறது சுவிஸ் அரசு.
.
இந்த கைது தொடர்பாக இன்று திங்கள் கவலை தெரிவித்து உள்ளது சுவிஸின்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு.
.
மகிந்த காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள் என்பவற்றை விசாரணை செய்த Nishantha Silva என்ற இலங்கை புலனாய்வு போலீசார் ஏற்கனவே சுவிஸுக்கு தப்பி ஓடியுள்ளார்.
.