சூடானில் இராணுவ ஆட்சி

Sudan

ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) இன்று வியாழன் இராணவம் ஆட்சி கவிழ்ப்பு செய்துள்ளது. சுமார் 30 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த Omar al-Bashir இராணுவத்தால் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். Omar ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த Awad Ibn Ouf புதிய ஆட்சிக்கு தலைமை தாங்கவுள்ளார்.
.
மேற்கு நாடுகள் மிக நீண்ட காலமாக Omar al-Bashir ரை ஆட்சியில் இருந்து விரட்ட முயற்சிகள் செய்து வந்துள்ளன. அவர்கள் International Criminal Court (ICC) மூலமும் இவரை விசாரணை செய்ய முனைந்துள்ளன.
.
இந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு முன், சில காலமாக Omar எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அங்கு நிகழ்ந்து வந்துள்ளன. அவ்வகை ஆர்ப்பாட்டங்கள் இந்த இராணுவ கவிழ்ப்பின் பின் நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியே.
.
இந்த இராணுவ கவிழ்ப்புக்கு உதவிய அந்நிய கரங்களும் இதுவரை அறியப்படவில்லை.

.