சூமா சிறையின் பின் தென் ஆபிரிக்காவில் வன்முறைகள்

சூமா சிறையின் பின் தென் ஆபிரிக்காவில் வன்முறைகள்

முன்னாள் சனாதிபதி சூமா (Jacob Zuma) சிறைக்கு சென்றபின் அங்கு வன்முறைகள் இடம்பெறுகின்றன. வன்முறைகளுக்கு குறைந்தது 72 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் பல வர்த்தகங்களும், வீடுகளும் கொள்ளைக்கு இரையாகின்றன.

இதுவரை சுமார் 1,235 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 200 shopping mall களில் உள்ள வர்த்தகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

தற்போதைய சனாதிபதி Cyril Ramaphosa மீதும் பலர் வெறுப்பு கொண்டுள்ளனர். Zuma, Ramaphosa இருவரும் மண்டேலாவின் ANC கட்சியினரே. மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் சூமாவும் மண்டேலாவுடன் சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.

அங்கே வேலைவாய்ப்பு இல்லாதோர் அல்லது மிக குறைந்த வருமானம் கொண்டோர் தொகை 32.6% ஆக உள்ளது. இளைய வயதினருள் அத்தொகை 46.3% உள்ளது.