சூறாவளி அன்ரூவை பின் தள்ளலாம் ஏர்மா

Irma-Andrew

அமெரிக்காவின் பிளோரிடா (Florida) மாநிலத்தை ஞாயிறு தாக்கவுள்ள சூறாவளி ஏர்மா (Hurricane Irma), பிளோரிடாவை 1992 ஆம் ஆண்டு தாக்கிய சூறாவளி அன்ரூ (Hurricane Andrew) ஏற்படுத்திய அழிவுகளுக்கும் அதிகமான அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
.
1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 270 km/h காற்றுடன் தாக்கிய சூறாவளி அன்ரூ 65 பேரை பலியாக்கி, சுமார் 63,500 வீடுகளை முற்றாக அழித்து சென்றது. மேலும் 124,000 வீடுகளை சேதப்படுத்தியும் சென்றது. அந்த சூறாவளியின் மொத்த அழிவு சுமார் $26.5 பில்லியன் ஆக இருந்தது. ஆனால் இந்த சூறாவளி கிழக்கு-மேற்காக, மிக குறைந்த அளவு தூரத்தில் பிளோரிடாவை கடந்து இருந்தது.
.
சூறாவளி ஏர்மா பிளோரிடாவை தெற்கு-வடக்காக நீண்டதூரம் கடக்கவுள்ளது. அதனால் ஏர்மா அதிகரித்த அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1950 ஆம் ஆண்டு தாக்கிய சூறாவளி King வழியில் செல்லும்.
.

ஏர்மா ஏற்கனவே சுமார் 20 பேரை பலிகொண்டுள்ளது. தற்போது கியூபாவின் வடகடலை அண்மிக்கும் ஏர்மா கியூபாவில் 15 முதல் 20 அங்குல மழையை பொழியும். தற்போது Category 5 ஆக்கவுள்ள ஏர்மா பிளோரிடாவை அடையும்போது Category 4 ஆகா குறையலாம்.
.