செலவாக்கியாவில் 12ம் நூற்றாண்டு இலங்கை நீல மாணிக்க மோதிரம்

செலவாக்கியாவில் 12ம் நூற்றாண்டு இலங்கை நீல மாணிக்க மோதிரம்

தற்போதைய செலவாக்கியா (Slovakia) என்ற நாட்டில் உள்ள கைவிடப்பட்டு, பாழடைந்த Doncov Castle என்ற அரண்மனையில் 2001ம் ஆண்டு நீல மாணிக்க கல் பதித்த  மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருந்தது.

இந்த 18-கரட் மோதிரத்தை பரிசோதனைகள் செய்த ஆய்வாளர் இது 12ம் நூற்றாண்டுக்கு உரியது என்று அறிந்துள்ளனர்.

அத்துடன் இந்த மோதிரத்தில் பதிக்கப்பட்டு இருந்த நீல மாணிக்கத்தின் (sapphire) இரசாயண பங்குகளை ஆராந்தபோது இது இலங்கையில் அகழ்வு செய்யப்பட்ட நீல மாணிக்கம் என்றும் அறியப்பட்டுள்ளது.

அதாவது 12ம் நூற்றாண்டிலேயே இலங்கை ஆபரணம் ஒன்று Kingdom of Hungary வரை சென்றது அறியப்பட்டுள்ளது.

இந்த மோதிரத்தின் இரு பக்கமும் இரண்டு சிங்கங்களின் தலைகள் வரையப்பட்டு இருந்துள்ளன.