சோமாலியா அகதிகள் வள்ளம் மீது சூடு, 33 பலி

Hodeida

சோமாலியா அகதிகள் சென்ற வள்ளம் ஒன்றின் மீது ஹெலி ஒன்று நடாத்திய சூட்டுக்கு 33 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். இந்த செய்தியை IOM (international Organization for Migration) பேச்சாளர் Joel Millman உறுதி செய்துள்ளார். இவரின் கருத்துப்படி இந்த அகதிகள் சோமாலியாவில் சூடான் நாட்டை நோக்கி பயணித்தவர்களாக இருக்கலாம். மரணித்தவருள் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
.
ஐக்கிய நாடுகளின் UNHCR அமைப்பும் இந்த சம்பவத்துக்கு கவலை தெரிவித்துள்ளது.
.
இந்த தாக்குதல் Bab al-Mandab நீரிணைக்கு அண்மையில் உள்ள Hodeida பகுதியில் இடம்பெற்றதாக யேமென் (Yemen) நாட்டு ஆயுத குழுக்கள் தெரிவித்து உள்ளன. இந்த குழுக்களுக்கு எதிராக சவூதி இராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
.

இந்த தாக்குதலுக்கு எவரும் உரிமை கூறவில்லை. ஆனால் இவ்விடத்தில் ஹெலி கொண்டு தாக்கும் வசதி சிலரிடம் மட்டுமே உண்டு. இந்த வள்ள தாக்குதலுக்கு அப்பால், கடந்த 24 மணித்தியாலங்களுள், மேலும் 32 பேர் Hodeida பகுதியில் இடம்பெற்ற சவூதி-Houthi சண்டைகளுக்கு பலியாகி உள்ளனர்.
.