ஜனாதிபதிக்கு அதிபதியாக அங் சன் சு கி

Burma

பொதுவாக நாடு ஒன்றில் அதிகம் அதிகாரம் கொண்ட ஒருவராக அந்நாட்டின் ஜனாதிபதி இருப்பார். ஆனால் பர்மாவில் ஜனாதிபதின் அதிபதியாக உருவாகியுள்ளார் அங் சன் சு கி.
.
இதுவரை பர்மாவை ஆட்சி செய்துவந்த இராணுவம் அந்நாட்டின் ஜனாதிபதி சார்பில் சட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அச்சட்டப்படி அந்நாட்டவர் ஒருவரின் குடும்ப உறவு ஒன்று வெளிநாட்டு பிரசையாக இருந்தால் அவர் பர்மாவின் ஜனாதிபதி ஆக முடியாது. அச்சட்டப்படி அங் சன் சு கி அந்நாட்டின் ஜனாதிபதி ஆக முடியாது. இவரின் இரண்டு பிள்ளைகள் பிரித்தானிய பிரசையாக இருப்பதே இதற்கு காரணம்.
.
கடந்த நவம்பர் மாதத்தில் அங் சன் சு கி தலைமையிலான கட்சி (NLD) வெற்றிபெற்று இருந்தாலும், அங் சன் சு கி ஜனாதிபதி ஆகவில்லை. பதிலாக அவரில் விசுவாசம் கொண்ட ஒருவரை அங் சன் சு கி ஜனாதிபதி ஆக்கியுள்ளார். அத்துடன் மிக முக்கிய 4 அமைச்சர் பதவிகளையும் அவர் தன்வசம் வைத்துள்ளார். வெளியுறவு, எரிபொருள், கல்வி, ஜாதிபதி அலுவலகம் ஆகிய 4 அமைச்சுக்களே அவை.
.
அத்துடன் அரச ஆலோசகர் (state adviser) என்ற ஒரு பதவியையும் அவர் தன்வசம் கொண்டுள்ளார். இதன் மூலம் ஜானதிபதி அலுவலகம் செய்யும் விடயங்களில் அவர் முக்கிய தலையீட்டை கொண்டிருப்பார்.
.