ஜப்பானின் கடன் 1000 ட்ரில்லியன் yen

JapanYen

முதல் தடவையாக ஜப்பானின் கடன் தொகை ஆயிரம் ரில்லியன் யென்னை (1000 trillion Yen = U$ 10.4 trillion) தாண்டியுள்ளது என்று ஜப்பானிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஜப்பானிய பிரசையும் 7.92 மில்லியன் yen (U$ 82,000) கடனாளியாவார். இத்தொகையில் 830 trillion அரச bond களும் அடங்கும்.

ஜப்பானிய நிதி அமைச்சின் தரவுகளின்படி கடந்த சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையான காலத்தில் மட்டும் ஜப்பானின் கடன் தொகை U$ 175 பில்லியன்களால் அதிகரித்துள்ளது. அவர்களின் கணிப்பின்படி 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் அந்நாட்டின் மொத்த கடன் U$ 11.4 trillion ஆக இருக்கும்.

ஜப்பானில் முதியோர் தொகை பாரிய அளவில் அதிகரித்தால் அங்கு 1990 இல் 47 trillion yen ஆக இருந்த உதவிச்சேவை தொகை 2010 இல் 103 trillion yen ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய ஜப்பானிய அரசு அடுத்த ஆண்டு நுகர்வோர் வரியை இருமடங்காக (தற்போதைய 5% ஐ முதலில் 8% ஆக்கி பின் 10% ஆக) அதிகரிக்கவும் திட்டமிடுகிறது.