ஜப்பானின் 120 வருட காலத்தில் அதிக Snow

Kofu

இந்த வருடம் ஜப்பானில் வழமைக்கு மாறாக அதிக snow வீழ்ச்சி இடம்பெறுகிறது. குறிப்பாக ஜப்பானின் பசுபிக் கரையோரமே இவ்வாறு அதிக snow வை பெறுகிறது. ஜப்பானின் பெருநகர் ரோக்கியோவுக்கு (Tokyo) மேற்காகவுள்ள நகரான Kofu சனிக்கிழமை காலை 6 மணிவரை 1 மீட்டருக்கும் அதிகமான snow வை பெற்றுள்ளது. கடந்த 120 வருட காலத்தில் இதுவே அதிகம் ஆகும். இங்கு இவ்வாறான தரவுகள் பதியப்படுவது 120 வருடங்களின் முன்னரே ஆரம்பமாகியது. இங்கு 1998 இல் 49 cm snow வீழ்ச்சி இடம்பெற்றது. இதுவே இரண்டாவது அதிக snow வீழ்ச்சி ஆகும்.

மத்திய ரோக்கியோவில் இந்த வாரம் 27 cm snow வீழ்ந்துள்ளது. கடந்த வாரமும் இங்கு இவ்வளவு snow வீழ்ந்துள்ளது. கடந்த 45 வருடகாலத்தில் இதுவே இங்கு அதிகம்.

மிகையான snow வீழ்ச்சிக்கு இதுவரை 12 நபர்கள் பலியாகியும் உள்ளனர்.
ஜப்பானின் பசுபிக் கரையோரம் மேலும் snow வீழ்ச்சியை பெறும் எனவும் வானிலை அவதானிகளால் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான காலநிலை காரணமாக Japan Airlines 135 உள்ளுர் சேவைகளையும் All Nipon Airways 130 சேவைகளையும் இரத்து செய்துள்ளன.