ஜப்பானில் அதிகரித்துவரும் தனிநபர் வரி

Japan_Birth_Death

2014 ஆம் ஆண்டில் சராசரி ஜப்பானியர் தமது மொத்த வருட வருமானத்தின் 41.6% ஐ வரியாக செலுத்துவர் என கணிக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் இங்கு தனிநபர் ஒருவரின் வரி அவரது மொத்த வருமானத்தின் 24.3% ஆக மட்டுமே இருந்துள்ளது. இந்த அதீத மாற்றத்துக்கு காரணம் ஜப்பானில் அதிகரித்துவரும் முதியோர் விகிதமும் அவர்களுக்கு வழங்கும் சேவைகளின் செலவுகளே. இங்கு சிறு தொகை உழக்கும் வயதினரின் வரியில் பெரும் தொகை முதியோருக்கு சேவை வழங்கவேண்டியுள்ளது.

2005 ஆம் ஆண்டில் ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டோர் வீதம் மொத்த சனத்தொகையின் 21% ஆக இருந்திருந்தது. அப்போது 15 வயதுக்கு உட்பட்டோர் அளவு 13.6% ஆக இருந்திருந்தது. சுமார் 24 வயதை அடையும் இந்த சிறு தொகையினரே இப்போது உழைக்கும் வர்க்கத்தில் நுழைகின்றனர். இவர்களிடம் இருந்து பெறப்படும் வரியிலேயே அரச சேவைகள் நடைபெறவேண்டும்.

சேவைகள் அதிகம் வழங்கப்படும் ஐரோப்பிய நாடுகளிலும் தனிநபர் வரி வீதம் அதிகம் தான். தனி நபர் வரி வீதம் பிரான்சில் 61.9%, சுவீடனில் 58.2%, ஜேர்மனில் 51.2% ஆகவும் உள்ளது. அனால் அமெரிக்காவில் இது 30.8% ஆகவும் தென்கொரியாவில் இது 34.5% ஆகவும் உள்ளது.