ஜப்பானில் மீண்டும் சின்சோ ஆபே ஆட்சி

Japan

ஜப்பானில் இன்று இடம்பெற்ற lower house தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு கட்சிகளே மீண்டும் 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகின்றன. அதனால் தற்போதைய ஜப்பானிய பிரதமர் சின்சோ ஆபே (Shinzo Abe) தொடர்ந்தும் பிரதமராக ஆட்சியை தொடரவுள்ளார்.
.
சின்சோ ஆபேயின் கட்சியான Liberal Democratic Partyயும் அதன் கூட்டு கட்சிகளும் 2/3 பெரும்பான்மையை இம்முறை வென்றுள்ளன. ஜப்பானில் நலமாக இயங்கும் பொருளாதாரமும், வலுவான எதிரணி இல்லாமையும் ஆபே குழு 2/3 பெரும்பான்மை பெற காரணமாக உள்ளன.
.
ஆபே பிரபலம் இல்லாத ஒருவராக இருந்தும், 2/3 பெரும்பான்மையை கைப்பற்ற எதிரணிகள் பிளவுபட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. Tokyo ஆளுநர் Yuriko Koike தனது தலைமையில் Party of Hope என்ற புதிய கட்சியை அமைத்து போட்டியிட்டிருந்தார்.
.
அதீத பெரும்பான்மையை கையில் கொண்ட ஆபே, ஜப்பானில் இருக்கும் இரண்டாம் உலக யுத்த காலத்து பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மாற்ற முனையலாம். இரண்டு அணு குண்டு தாக்குதல்கள் செய்யப்பட்டபின் ஜப்பான் நிபந்தனை எதுவுமின்றி சரணடைந்தது. அப்போது அமெரிக்கா எழுதிய Article 9 என்ற சட்டம் ஜப்பானில் நடைமுனையானது. அது ஜப்பான் பெரும் பாதுகாப்பு படைகளை கொண்டிருப்பதை ஏறக்குறைய தடை செய்கிறது. ஆனால் தற்போது அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக ஜப்பானில் படைகளை வளர்க்க விரும்புகிறது.
.

இம்முறை சுமார் 53.7% அங்கீகரிக்கப்பட்ட வாக்காளரே வாக்களித்துள்ளனர்.

.