ஜான்சனின் திட்டத்தை பாராளுமன்றம் நிராகரிப்பு

UK_EU

பிரித்தானிய பிரதமர் விரைவுபடுத்தி தயாரித்த Brexit திட்டத்தை பிரித்தானிய பாராளுமன்றம் இன்று சனிக்கிழமை மறைமுகமாக நிராகரித்து உள்ளது. இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறை செய்வது என்ற சட்டத்தை முதலில் பாராளுமன்றம் அங்கீகாரம் செய்யவேண்டும் என்றுள்ளது பிரித்தானிய பாராளுமன்றம். குழம்பியுள்ள பிரதமர் தற்போது முரண்பட்ட கடிதங்களை சமர்ப்பித்து வருகிறார்.
.
சட்டப்படி பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அக்டோபர் 31 ஆம் திகதி வெளியேறும் தீர்வு திட்டம் இன்று சனிக்கிழமை பிரித்தானிய பாராளுமதினால் அங்கீகரிக்கப்பட்டு இருத்தல் வேண்டும். அது தவறிய நிலையில், பிரித்தானியா அக்டோபர் 31 ஆம் திகதிக்கு பின்னான நாள் ஒன்றிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறலாம்.
.
பிரித்தானியா வெளியேறும் தினம் அக்டோபர் 31 ஆம் திகதிக்கு அப்பால் செல்லுமானால், பதிலாக தான் கால்வாய் ஒன்றில் செத்துக்கிடக்கலாம் (dead in a ditch) என்று முன்னர் கூறியிருந்தார் ஜான்சன். தற்போது அவர் வேறுவழியின்றி சட்டத்தில் கூறியபடி வெளியேற்ற காலத்தை நீடிக்க உள்ளார்.
.
விசனம் கொண்ட ஜான்சன் தனது கையொப்பம் இல்லாத வெளியேற்ற நீடிப்பு கடிதம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பி உள்ளார். அதற்கு பின் இன்னோர் கடிதத்தில் தான் வெளியேற்ற நீடிப்பை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
.