ஜெனரல் ஜெயசூரியா மீது War Crime வழக்கு தாக்குதல்

JagathJayasuriya

தற்போது Brazil, Colombia, Peru, Chile, Argentina, மற்றும் Suriname ஆகிய நாடுகளின் இலங்கை தூதுவராக பதவி வகிக்கும் முன்னாள் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா (Jagath Jayasuriya) மீது war crime வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தூதுவர் என்ற முறையில் இந்த நாடுகளில் ஜெயசூரியாவுக்கு diplomatic immunity உண்டு.
.
இந்த வழக்கை முன்னின்று செயல்படுத்தும் வழக்கறிஞர் Carlos Castresana Fernandez மேற்படி வழக்கு திங்கள்கிழமை பிரேசிலும், கொலம்பியாவிலும் தாக்கல் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். வரும் நாட்களில் ஏனைய நாடுகளிலும் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
.
தென் ஆபிரிக்காவை தளமாக கொண்ட International Truth and Justice என்ற அமைப்பு இந்த வழக்கு முயற்சியில் பங்கு கொண்டுள்ளது. இந்த அமைப்பு தாம் 14 பாதிக்கப்பட்டவர்களை விசாரணை செய்ததாகவும் கூறியுள்ளது.
.
இறுதி யுத்தத்தின் போது வன்னியில் கட்டளை அதிகாரியாக (commander) ஜெயசூரியா கொழும்பு Royal கல்லூரியில் படித்தவர். இவர் University of Madras சென்று இராணுவ துறையில் M.Sc. பெற்றவர். 2015 ஆம் ஆண்டுமுதல் இவர் பிரேசில் உட்பட்ட நாடுகளுக்கு தூதுவராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.

.