அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக பேச்சு ஒன்று சுவிற்சலாந்து நாட்டின் ஜெனீவா நகரில் தற்போது இடம்பெறுகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் வரி யுத்தத்தில் இருந்து தம்மை விடுவித்து கொள்ளவே இந்த பேச்சு இடம்பெறுகிறது.
அமெரிக்கா தரப்பில் Treasury Secretary யான Scott Bessent உம், சீனா தரப்பில் உதவி Premier He Lifeng உம் ஜெனீவா பேச்சில் ஈடுபடுகின்றனர்.
பேச்சுக்கு முன் ரம்ப் சீனா மீதான தனது 145% இறக்குமதி வரி மிக அதிகம் என்றும், 80% இறக்குமதி வரியே தகுந்த வரி என்று கூறியிருந்தார். அவ்வாறு அமெரிக்கா 80% வரியை நடைமுறை செய்ய முனைந்தால், சீனாவும் 80% வரியை நடைமுறை செய்தால் வர்த்தக யுத்தத்தில் பெரி மாற்றம் இருக்காது. அதனால் இந்த பேச்சில் அதிகம் நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது.
பசிபிக் கடலோரம், கலிபோர்னியாவில் உள்ள Long Beach துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களில் தொகை சுமார் 35% முதல் 40% ஆல் குறைந்துள்ளது என்றும், Los Angeles துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களில் தொகை 31% குறைந்துள்ளது என்றும் துறைமுக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீன பொருட்களுக்கு தற்போது உடனடி மாற்றீடு இல்லாமை அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு ஆபத்தாக அமையும்.