ஜெனீவாவில் இலங்கை வாக்கெடுப்பு செவ்வாய்க்கு பின்போடல்

ஜெனீவாவில் இலங்கை வாக்கெடுப்பு செவ்வாய்க்கு பின்போடல்

ஜெனீவாவில் இடம்பெறவிருந்த UNHRC சபையின் இலங்கை மீதான தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு இன்று திங்கள்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டு இருந்தாலும், இறுதி நேரத்தில் அது செவ்வாய்க்கிழமைக்கு பின்போடப்பட்டு உள்ளது. கால அட்டவணை தயாரிக்கும் நெருக்கடியே காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சனாதிபதி கோத்தபாயா Organization of Islamic Cooperation (OIC) செயலாளருடன் தொலைபேசி தொடர்பு கொண்டு இலங்கைக்கு இறுதி நேர ஆதரவு தேடியுள்ளார். அதேவேளை பிரதமர் மகிந்த பஹ்ரைன் நாட்டின் Deputy King உடன் உரையாடி இறுதி நேர ஆதரவு தேடியுள்ளார்.

இந்த விசயத்தில் இந்திய பிரதமர் மோதியின் நிலையே நெருக்கடியில் உள்ளது. வரவுள்ள தமிழ்நாட்டு தேர்தலில் ஆதரவு பெற இலங்கை தமிழர் சார்பில் அவர் செயற்பட வேண்டும். ஆனால் அது இலங்கையை சீனா பக்கம் தள்ளும். தி.மு.காவின் ஸ்டாலின் ஏன் பிரதமர் மோதி இந்த விசயத்தில் மௌனமாக உள்ளார் என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டின் MDMK, PMK ஆகிய கட்சிகளும் இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கூறுகின்றன.

பாகிஸ்தானும், பங்களாதேசமும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதேவேளை சீனா இலங்கையுடன் $1.5 பில்லியன் currency swap செய்யவுள்ளது என்று இன்று திங்கள் இலங்கை அறிவித்து உள்ளது. இது இலங்கையை மேற்கின் கட்டுபாட்டில் உள்ள IMF (International Monitory Fund) அமைப்பில் இருந்து சுதந்திரப்படுத்தி, சீனாவில் தங்க வைக்கும்.