ஜெருசலேத்தில் அமெரிக்க தூதுவராகம், 52 பலஸ்தீனர் பலி

Jerusalem

இதுவரைகாலமும் இஸ்ரேலின் Tel-Aviv நகரில் இருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவரகத்தை ரம்ப் ஜெருசலேம் நகருக்கு இன்று நகர்த்தி இருந்தார். அதை எதிர்த்து பலஸ்தீனர் கிளர்ச்சி செய்தபோது, குறைந்தது 52 பேர் இஸ்ரேலினால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 1,200 பேர் வரை காயம் அடைந்தும் உள்ளனர்.
.
ஜெருசலேத்தின் எதிர்காலத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படவேண்டும் என்று பலஸ்தீனர் கூறி வந்துள்ளனர். கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனர் தமது தலைநகர் ஆக விரும்பியுள்ளனர். ஜெருசலேம் இரண்டு தரப்புக்கும் பொதுவான ஒரு நகராவே அமைவது நலன் என்று பல நாடுகளும் கருதி வந்தன.
.
ஆனால் யூதரின் ஆதிக்கத்தில் உள்ள ரம்ப் (இவரின் மருமகனும் ஒரு யூதர்) தன்னிச்சையாக அமெரிக்காவின் தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்தி உள்ளார். மேற்கு நாடுகள் உட்பட மற்றைய அனைத்து நாடுகளும் இப்போதும் தமது தூதுவரகங்ளை Tel-Aviv நகரிலேயே தொடர்ந்து கொண்டுள்ளன.

.