ஜெர்மனி, பெல்ஜிய வெள்ளத்துக்கு 67 பேர் பலி

ஜெர்மனி, பெல்ஜிய வெள்ளத்துக்கு 67 பேர் பலி

ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் வியாழன் திடீரென ஏற்பட்ட வெள்ளத்துக்கு குறைந்தது 67 பேர் பலியாகி உள்ளனர். அதில் அதிகமானோர் ஜெர்மனியிலேயே பலியாகி உள்ளனர். பெல்ஜியத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இராணுவம் ஹெலிகள் மூலம் பலரை காப்பாற்றியும் உள்ளது.

Cologne நகருக்கு தெற்கே உள்ள Euskirchen என்ற நகரில் 15 பேர் வெள்ளத்துக்கு பலியாகி உள்ளனர். Bad Neuenahr-Ahrweiler என்ற இடத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

பாலங்கள் பல உடைந்தும், ஆறுகளுக்கு அருகே உள்ள வீடுகள் அழிக்கப்பட்டும் உள்ளன. சிலர் அவர்களின் வீட்டு கூரைகளில் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டு உள்ளனர்.

Meuse, Rhine, Ahr ஆகிய ஆறுகள் தற்போது ஆபத்தான அளவு வெள்ள ஓட்டத்தை கொண்டுள்ளன. ஏற்கனவே நிரம்பிய Meuse ஆற்று நீரின் மட்டம் மேலும் 1.5 மீட்டரால் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்துவரும் தினங்களில் மேலும் கடும் மழை பொழியும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.