ஜெர்மன் NATO நிலையத்தின் உள்ளேயே Darknet

NATO

Darknet என்பது இன்டர்நெற்றுக்குள் ஒளிந்து செயல்படும் வலையமைப்பு. இது பொதுவாக உலகின் பெரும் சட்டவிரோதிகள், போதை கடத்துவோர் போன்ற சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படும் இன்டர்நெற்றின் அங்கம். சாதாரண பாவனையாளர் இதை அடைய முடியாது.
.
Darknet பாவனையாளர் தமது இணைப்புகளை
மிகத்தரமான encyption செய்வதன் மூலம் அரசுகள், போலீசார் அடையாளம் காணமுடியாதவாறு தொடர்பாடல் செய்வர். இவர்களுக்கு சேவை செய்யும் server களை இலாப நோக்கம் மட்டும் கொண்ட சமூகவிரோத நிறுவனங்கள். அவ்வகை நிறுவனம் ஒன்றே ஜெர்மனில் உள்ள NATO அமைப்பின் நிலையம் ஒன்றின் உள்ளேயே இருந்துள்ளது கண்டுபிடிக்கப்படுள்ளது.
.
வெள்ளிக்கிழமை ஜெர்மன் அதிகாரிகள் வெளியிட்ட செய்திகளின்படி சுமார் 600 போலீசாரும், அதிகாரிகளும் Mosel ஆற்றின் கரையோரம் உள்ள Traben-trarbach என்ற நகரில் உள்ள NATO வுக்கு சொந்தமான நிலையம் ஒன்றில் மேற்படி 200க்கும் மேற்பட்ட Darknet servarகள் இருந்ததை கண்டுள்ளனர். இந்த NATO நிலையம் பாதுகாப்பு வேலிகள், video கண்காணிப்புகள் கொண்ட ஒரு நிலையம்.
.
போலீசார் 20 வயது முதல் 59 வயது வரையான 13 பேரை கைது செய்துள்ளனர். இந்த Darknet இன் தலைவர் 59 வயதுடைய நெதர்லாந்துக்காரர். ஆனால் இவரின் வதிவிடம் சிங்கப்பூர் என்று கூறப்படுகிறது. இவர் servar கள் உள்ள இடத்திலேயே குடியிருந்துள்ளார்.
.
மேற்படி Darknet server கள் 2013 ஆம் ஆண்டில் இருந்து சமூகவிரோதிகளுக்கு இன்டர்நெற் சேவையை வழங்கிவந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
.