ஜெஹோவாவுக்கு ரஷ்யாவில் தடை

Jehovah

Jehovah’s Witness என்ற அமைப்புக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வமைப்பு ரஷ்யாவின் எந்தப்பகுதியிலும் செயல்பட கூடாது என்றும், அந்த அமைப்புக்கு உரிய சொத்துக்களை அரசிடம் கையளிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.
.
ரஷ்யாவில் இந்த மைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது என்று அரசால் கூறப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் பலம் மிக்க Russian Orthodox Church மேல்கூறிய அமைப்பை “destructive sect” என்று கூறியுள்ளது. பல நாடுகளில் இந்த அமைப்புக்கு எதிராக புகார்கள் எழுந்தாலும், ரஷ்யாவில் மட்டுமே இவ்வாறு தடை வந்துள்ளது.
.
இந்த அமைப்பு சுமார் 395 கிளைகளை ரஷ்யாவில் கொண்டுள்ளது. உலக அளவில் இந்த அமைப்புக்கு சுமார் 8.3 மில்லியன் உறுப்பினர் உண்டு என்று கூறப்படுகிறது.
.
அமெரிக்காவில், 1870 ஆம் ஆண்டுகளில் Bible Student Movement என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு 1931 ஆம் ஆண்டில் Jehovah’s Witness என்ற பெயரை கொண்டது.

.