டாலருக்கு 300 ரூபாய்க்கு மேல் நாணய மாற்று

டாலருக்கு 300 ரூபாய்க்கு மேல் நாணய மாற்று

முதல் முறையாக அமெரிக்க டாலர் ஒன்றுக்கு இலங்கை ரூபா 300 க்கும் அதிகமாக தற்போது கிடைக்கிறது. சட்டப்படியான வங்கிகள் இத்தொகையை வழங்கும் அதேவேளை தனியார் உண்டியல்கள் சில இடங்களில் 400 ரூபாய் வரை வழங்குகின்றன.

தற்போது இலங்கையிடம் உள்ள அந்நிய செலவாணி சுமார் $2 பில்லியன் மட்டுமே. ஆனால் இந்த ஆண்டு முடிவடைதற்குள் இலங்கை சுமார் $7 பில்லியன் கடனை அடைக்கவேண்டும். அதற்கான பணம் தற்போது இலங்கையிடம் இல்லை. ஏற்றுமதி, உல்லாச பயண மற்றும் மத்திய கிழக்கு வருமானம் வேகமாக வளரும் என்றும் கூற முடியாது.

பதிலுக்கு தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் உல்லாச பயணிகள் வருகையை குறைக்கலாம்.

இலங்கை தற்போது மொத்தம் $56.3 பில்லியன் கடனை கொண்டுள்ளது. அதில் அதிக கடனை வழங்கிய நாடுகள் அல்லது அமைப்புகள் பின்வருமாறு:

Market Borrowings 47%
Asian Development Bank 10%
சீனா 10%
ஜப்பான் 10%
உலக வங்கி 9%
இந்தியா 2%