டிரம்பின் 2005 ஆம் ஆண்டு வரி விபரம் பகிரங்கம்

Trump

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் ஆக இருந்த காலத்தில் இருந்தே அவரின் வருமானத்தையும், அவர் செலுத்திய வரியையும் அறிய பலர் ஆவலாக இருந்தனர். இந்த விபரங்களை பத்திரிகையாளர் டிரம்பிடம் கேட்டிருந்த போதும், டிரம்ப் தனது வரி மீள் பரிசீலனையில் (audit) உள்ளதகாவும், அது முடிந்தபின் வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னரும் அவ்வாறே கூறு இழுத்தடித்து வந்தார்.
.
ஆனால் இன்று MSNBC என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டுக்கான டிரம்பின் வருமானம், மற்றும் அவர் செலுத்திய வரி ஆகிய விபரங்ககளை வெளியிட்டு உள்ளது. அதனால் கோபம் கொண்டாலும், வெளியிடப்பட்ட விபரங்கள் சரியானவை என்றுள்ளார் டிரம்ப் தரப்பினர்.
.
2005 ஆம் ஆண்டில் டிரம்ப் சுமார் $150 மில்லியனை வருமானமாக (taxable income) கொண்டிருந்துள்ளார். அதேவேளை அவர் சுமார் $103 மில்லியன் இழப்புகளை (write-down) 2005 ஆம் ஆண்டில் பதிந்துள்ளார். அதனால் அவரின் வரிக்குரிய வருமானம் மிகையாக குறைந்துள்ளது. தன்னால் அவர் $38 மில்லியன் மட்டுமே வரியாக செலுத்தி உள்ளார். அதன்படி டிரம்பின் வருமான வரி வீதம் 25% ஆக குறைந்துள்ளது. இது சாதாரண மக்களின் வரி வீதத்திலும் மிகவும் குறைந்த தொகையே.
.

டிரம்ப் 1995 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வர்த்தக இழப்பு (net loss) ஒன்றை பதிந்துள்ளார் என்றும், அந்த இழப்பையே பின்வரும் ஆண்டுகளில் write-down செய்து வந்துள்ளார் என்றும் முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.
.