டெல்லியில் AAP வெற்றி, மோடியின் BJP படுதோல்வி

AAP_India

இன்று வெளியான டெல்லி மாநில தேர்தல் முடிவுகளின்படி இலஞ்ச எதிர்ப்பு கட்சியான AAP மொத்தம் 70 ஆசனங்களில் 67 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மோடியின் BJP கட்சிக்கு 3 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. தேர்தலின் போது AAP கட்சி Arvind Kejriwal தலைமையிலும் BJP  கட்சி Nupur Sharma தலைமையிலும் போட்டியிட்டு இருந்தன. காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. 2013 ஆம் ஆண்டு முடியும் வரை காங்கிரஸ் 15 வருடமாக டெல்கியை ஆண்டு வந்திருந்தது.
.
2013 ஆம் ஆண்டு தேர்தலில் BJP 31 ஆசனங்களையும், AAP 28 ஆசனங்களையும், காங்கிரஸ் 8 ஆசனங்களையும் பெற்று இருந்தன. அப்போதும் ஆட்சி அமைத்த AAP அனுபவம் இன்மையால் 49 நாட்களில் கவிழ்ந்திருந்தது.
.
2008 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 43 ஆசனங்களையும், BJP 23 ஆசனங்களையும் பெற்று இருந்தன.
.
New Delhi தொகுதி வாக்குகள்:
Arvind Kejriwal (AAP): 57213

Nupur Sharma (BJP): 25630