தாக்குதலின் பின் சவுதியின் கிழக்கு-மேற்கு மசகு குழாயும் நிறுத்தம் 

தாக்குதலின் பின் சவுதியின் கிழக்கு-மேற்கு மசகு குழாயும் நிறுத்தம் 

ஈரான் சார்பு ஆயுத குழு ஒன்று ஈராக்கில் இருந்து ஏவிய ஏவுகணை அல்லது drone தாக்குதலால் சவுதியின் கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய் (East-West Pipeline) சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு பலர் காயப்பட்டு உள்ளதாகவும், pumping station உட்பட குழாய் கட்டுமானங்கள் அழிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹோர்முஸ் கப்பல் பாதையை ஈரான் மூடிய பின் சவுதி கிழக்கு பகுதியில் கிடைக்கும் மசகு எண்ணெய்யை கிழக்கு-மேற்கு குழாய் மூலம் மேற்கே அனுப்பி அங்கிருந்து செங்கடல் வழியாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அந்த வழியே தற்போது முடங்கி உள்ளது.

இந்த குழாய் மூலம் சவுதி தினமும் 5 மில்லியன் பரல்கள் எரிபொருளை செங்கடல் துறைமுகத்துக்கு அனுப்பி இருந்தது.

செங்கடல் ஏற்கனவே ஈரான் சார்பு கூர்தி (Houthis) ஆயுத குழுவின் கையில் உள்ளது.