தாய்ப்பாலுக்கு எதிராக அமெரிக்க ரம்ப் அரசு

WHO

World Health Organization (WHO) தாய் பாலூட்டலை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறை செய்யவிருந்த செயல்பாடுகளை அமெரிக்காவின் ரம்ப் அரசு தடுக்க முனைந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது. இறுதியில் ரஷ்யாவின் உதவியுடனேயே WHO அமைப்பின் இந்த முயற்சிகள் நடைமுறை செய்யப்பட்டன.
.
அண்மையில் WHO தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த தீர்மானம் ஒன்றை செய்யவிருந்தது. அத்துடன் அரசுகள் குழந்தை உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவதையும் தடை செய்ய அறிவுறுத்த முனைந்தது WHO.
.
இதனால் விசனம் கொண்ட குழந்தை உணவுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் ரம்ப் அரசின் உதவியை நாடின. உடனே இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்யவிருந்த Ecuador நாட்டை மிரட்டியது அமெரிக்கா. பயம் கொண்ட  Ecuador இவ்விடயத்தில் இருந்து விலகியது. வேறு பல வறிய நாடுகளும் பின்வாங்கின. அப்போதே ரஷ்யா இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்து, அங்கீகரிக்க உதவியது.
.
உலக அளவில் குழந்தை உணவு சந்தை சுமார் $70 பில்லியன் பெறுமதி கொண்டது.அதை ஒருசில அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களே கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
.
வளர்ந்த நாடுகளில் தாய்மார் மீண்டும் தாய்ப்பாலுக்கு முக்கியத்துவம் வழங்க ஆரம்பித்துள்ளனர். அதனால் குழந்தை உணவு நிறுவனங்கள் வளரும் நாடுகளிலேயே தம்மை வர்த்தக நோக்கம் கொண்ட பிரச்ச்சாரங்கள் மூலம் வளர்க்க முனைகின்றன.
.

The Lancet அமைப்பால் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் வருடம் ஒன்றில் சுமார் 800,000 குழந்தை மரணங்களை தவிர்க்க முடியும் என்றுள்ளது. இன்னோர் ஆய்வு தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான nutrients மற்றும் hormones ஆகியவற்றை வழங்கிவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாகவும் கூறுகிறது.
.