தாய்லாந்தை ஊடறுத்து கிரா கால்வாய்?

KraCanal

தாய்லாந்தை ஊடறுத்து கிரா (Kra Canal) என்ற கால்வாய் சீனாவின் தலைமையில் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு கால்வாய் அமைக்கப்பட்டால் அது சுயஸ் (Suez) கால்வாய், பனாமா (Panama) கால்வாய் போன்று முக்கிய ஒரு கப்பல் போக்குவரத்து வழியாக அமையும்.
.
தாய்லாந்துக்கு குறுக்காக 135 km நீளம் கொண்ட இந்த கால்வாயை அமைக்க சுமார் $28 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. அந்தமான் கடலையும், தாய்லாந்து குடாவையும் இணைக்கும் இந்த கால்வாய் இலகுவாக தென்சீன கடலையும், இந்து சமுத்திரத்தையும் இணைக்கும்.
.
தற்போது இந்துசமுத்திரத்துக்கும் தூரகிழக்குக்குமான கப்பல் பயணம் மலாக்கா நீரினை (Straits of Malacca) மூலமே இடம்பெறுகிறது. சிங்கப்பூர் துறைமுகம் அப்பாதையில் ஒரு முக்கிய துறையாகும். கிரா கால்வாய் அமைக்கப்படால் மேற்படி கப்பல் போக்குவரத்து 1200 km தூரத்தால் குறையும்.
.
கரா கால்வாய் அமையின், சிங்கப்பூர் துறைமுகம் முக்கியத்துவம் குறைந்து இலங்கை துறைமுகம் முக்கியத்துவம் பெறலாம். கொள்கலன்களை ஒரு கப்பலில் இருந்து இன்னோர் கப்பலுக்கு மாற்றும் இடமாக இலங்கை துறைமுகம் முக்கியம் பெறும். அதுவே சீனாவின் நோக்கமாகவும் இருக்கலாம்.
.

பழைய பதிவுகளின்படி 1677 ஆம் ஆண்டு முதல் கிரா கால்வாய் கனவு பலருக்கும் இருந்து வந்துள்ளது. பிரித்தானியர், பிரெஞ்ச் எல்லோருமே இந்த கனவை கொண்டிருந்தனர். ஆனால் செலவு காரணமாக அவர்கள் மேற்கொண்டு எதையும் செய்திருக்கவில்லை. சீனா தற்போது அந்த முயற்சியில் நாட்டம் கொண்டுள்ளது. தாய்லாந்திலும் பலர் அதை விரும்புகின்றனர்.
.