ஹோர்முஸ் நீரிணையை தனது இராணுவ பலத்தால் திறக்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் இறுதி நேரத்தில் ஈரான் மீதான தாக்குதலை 2 கிழமைகளுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
மேற்படி யுத்த நிறுத்த காலத்தில் ஹோர்முஸ் நீரினை ஊடாக அதிகரித்த அளவில் கப்பல்கள் பயணிக்கும் என்றாலும் ஹோர்முஸ் தொடர்ந்தும் ஈரானின் கடுப்பாட்டிலேயே இருக்கும். ஈரானிடம் அனுமதி பெற்ற கப்பல்கள் மட்டுமே இதனூடு பயணிக்கலாம்.
ஹோர்முஸ் ஊடான போக்குவரத்து தனது கட்டுப்பாடில் இருக்கவேண்டும் என்று அடம்பிடித்த ரம்ப் தற்போது அந்த நிபந்தனையை கைவிட்டு உள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி பேச்சுக்கள் பாகிஸ்தானில் 11ம் திகதி ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
ஈரான் யுத்த நிறுத்தம் லெபனான் யுத்தத்தையும் நிறுத்தும்.
நிறுத்தத்தை பாகிஸ்தான் பிரதமரே முன்னின்று நடைமுறை செய்துள்ளார். இவரை ரம்ப் பாராட்டி உள்ளார். மறுபுறம் இந்திய பிரதமர் மோதி முற்றாக பின் தள்ளப்பட்டு உள்ளார்.
