தினங்களில் சீனா Carrier-killer ஏவுகணையை பரிசோதிக்கும்?

தினங்களில் சீனா Carrier-killer ஏவுகணையை பரிசோதிக்கும்?

வரும் சில தினங்களில் சீனா தனது carrier-killer என்ற விமானம் தாங்கி கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய மிக பலம்வாய்ந்த ஏவுகணையை பரிசோதனை செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு வசதியாக Hainan தீவுக்கு அண்டிய பெருமளவு தென்சீன கடல் பகுதியை சீனா முறைப்படி கப்பல் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளது.

சீனாவின் DF-26 (Dong-Feng 26, கிழக்கு-காற்று 26) என்ற ஏவுகணையே பரிசோதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் தாக்குதல் தூரம் 5,000 km. இது 1,200 முதல் 1,800 kg எடை கொண்ட குண்டை காவக்கூடியது.

ஏவுகணை சோதிப்பு வெள்ளி முதல் செவ்வாய் வரையான தினங்களில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான சோதனையை இதுவரை அமெரிக்கா, சோவியத் போன்ற பலமான நாடுகள் செய்திருக்கவில்லை.

ஏற்கனவே அமெரிக்கா தலைமையில் பிரித்தானியா போன்ற நாடுகள் இப்பகுதியில் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் விருப்பப்படி இந்தியாவும் தனது 4 யுத்த கப்பல்களை அங்கு அனுப்பி உள்ளது. இவர்களின் பயிற்சி ஆகஸ்ட் 27ம் திகதி வரை இங்கு இடம்பெறும்.