திருமலை மின்னுலை திட்டத்திலிருந்து வெளியேறுகிறது இந்திய NTPC?

இந்திய அரச கூட்டுத்தாபனமான NTPC (National Thermal Power Corporation) இலங்கையின் திருகோணமலையில் 500 MW நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நிறுவ இலங்கை மின்சார சபையுடன் (CEB – Ceylon Electricity Board) புரிந்துணர்வு ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கை 2011 ஆன் ஆண்டு மாசி மாதத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மொத்த செலவு இந்திய Rs. 4,000 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வருடம் தை மாதம் 7 ஆம் திகதி CEB தலைவர் எழுதிய கடிதத்தில் சில மாற்றங்களை கொண்டுவர விரும்பியுள்ளது. NTPC இன் கூற்றுப்படி, CEB முன்னர் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு (cost of operation and maintenance) கட்டணமாக MW  ஒன்றுக்கு  Rs 38.92 இலட்சம் செலுத்த இணங்கியிருந்தது. ஆனால் அந்த தொகையை MW ஒன்றுக்கு Rs 20.5 இலட்சம் ஆக குறைக்க விரும்புவதாக கூறியுள்ளது. இதை நிராகரிக்கிறது NTPC.

தரவு: Indian Express