துக்ளக் சோ மரணம்

Cho

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல், நகைச்சுவை மற்றும் நாடகத்துறையாளருமான சோ ராமசாமி தனது 82ஆவது வயதில் இன்று புதன் காலமானார். எவருக்கும் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்காத இவர் எவரையும் தட்டிக்கேட்க பின்தங்கியது இல்லை. அதனால் இவர் பல எதிரிகளை உருவாக்கி இருந்தார். இவர் அ.தி.மு.கட்சியையும் சாடியிருந்தார், தி.மு.கட்சியையும் சாடியிருந்தார். BJP ஆதரவு கருத்துக்களை வெயிட்டு இருந்தாலும், இவர் BJP பாபர் மசூதி அழிப்பு நடவடிக்கையையும் சாடியிருந்தார். இவர் MGR அரசையும் சாடியிருந்தார்.
.
இவர் எழுதிய “முகமட் பின் துக்ளக்” என்ற அரசியல் நையாண்டி ஆக்கத்தின் பின்னரே இவர் துக்ளக் என்ற புனைபெயரை கொண்டார். முகமட் பின் துக்ளக் என்பவர் 1351 ஆம் ஆண்டில் மரணமான டெல்லி சுல்தான் (Sultan of Delhi) ஆவார்.
.
இந்தியா-சோவியத்தின் நல்லுறவு காலத்தில் இவர் சோவியத்தையும் சாடியிருந்தார். அக்காலத்தில் சோவியத் தலைநகர் மொஸ்கோவே இந்தியாவின் தலைநகர் என்று கூறியிருந்தவர் இவர். சோவியத் இந்தியாவை நட்பு என்ற பெயரில் அடிமைப்படுத்துவதாக கூறியிருந்தவர். உழவர்களை துன்புறுத்தும் கொள்கைகள் காரணமாக சோவியத் தோல்வியில் முடியும் என்று இவர் கூறியிருந்தவர்.
.
புலிகளை முற்றாக நிராகரித்த இவர் ராஜீவ் காந்தி, ஜே. ஆர். செய்து கொண்ட இலங்கை-இந்திய ஓப்பந்தத்தை நன்கு ஆதரித்தவர்.
.

இவர் 1963 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘பார் மகளே பார்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகம் புகுந்தவர். சுமார் 180 படங்களில் நடித்த இவர், 5 படங்களை இயக்கியும் இருந்தார். இவர் ‘ஆயிரம் பொய்’ உட்பட பல படங்களுக்கு திரைக்கதையும் எழுதி இருந்தவர்.
.