தென்கொரிய ஒலிம்பிக் ஆசனங்கள் விற்பனை 32% மட்டுமே

OlympicsWinter2018

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை தென்கொரியாவில் இடம்பெறவுள்ள Winter Olympic விளையாட்டுகளுக்கான ஆசனங்களின் 32% மட்டுமே அக்டோபர் 24 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்தத்திலும் மிக குறைவான தொகையே. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இடம்பெற்று வரும் முறுகல் நிலையே இதற்கு காரணம்.
.
கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி வரை மொத்தம் 341,327 ஆசனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
.
ஒலிம்பிக் போட்டியை காணவரும் பயணிகளை கவரும் நோக்கில் hotel, motel, போன்ற உல்லாச பயணத்துறை சார் வர்த்தக உரிமையாளர் பெரும் பணம் செலவழித்து புதிப்புப்பு வேலைகளை செய்துள்ளனர். அவர்கள் அந்த முதலீடுகள் மீள பெறுவார்களா என்பது சந்தேகமான நிலையிலேயே தற்போது உள்ளது.
.
Winter விளையாடுகள் இடம்பெறவுள்ள தென்கொரிய நகரமான PyeongChang, வடகொரிய எல்லையில் இருந்து சுமார் 80 km தூரத்திலேயே உள்ளது. இந்நிலையிலேயே பலரும் தமது பெரும் பணம் செலவழித்து ஆசனங்களை முன்கூட்டியே கொள்வனவு செய்வதை தவிர்க்கின்றனர்.
.
கடந்த வருடம் தென்கொரியாவுக்கு பயணித்த உல்லாச பயணிகளில் 50% பயணிகள் சீனாவில் இருந்தே சென்றுள்ளார். இறுதி நேரத்தில் சீன பயணிகள் வரக்கூடும் என்றே தென்கொரியா என்று எதிர்பார்த்து உள்ளது.

.