தென்கொரிய ஜனாதிபதி பதவி விலக்கப்பட்டார்

ParkGeunHye

ஊழல் குற்றசாட்டு காரணமாக தென்கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி Park Geun-hyeயின் பதவியை நீதிமன்றம் சற்றுமுன் பறித்துள்ளது. “The court dismisses President Park Geun-hye from her position,” என்றுள்ளார் நீதிபதி Lee Jung-mi. எட்டு நீதிபதிகள் கொண்ட குழுவின் எட்டு நீதிபதிகளும் சட்டசபை ஜனாதிபதியை பதவி விலக்கியது (impeach) சரி என்று தீர்வு கூறியுள்ளனர்.
.
வடகொரியா ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தும் இந்த நேரத்தில் தென்கொரியா ஜனாதிபதியை இழப்பது தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பெரும் இழப்பாகும். தென்கொரியாவின் சட்டப்படி அடுத்த 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடாத்தப்படல் வேண்டும்.
.
ஜனாதிபதி Park Geun-hye, தனது நண்பியான Choi Soon-sil என்பவருக்கு அரச இரகசியங்கள் அடங்கிய அறிக்கைகளை சட்டத்துக்கு முரணாக வழங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Choi Soon-sil குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பி உள்ளார். இவரும், ஜனாதிபதியும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அறிமுகமானவர்கள்.
.

இந்த ஊழல் காரணமாக தென்கொரியாவின் Samsung நிறுவனத்தை ஆரம்பித்தவரின் பேரனான Lee Jae-yongகும் தென்கொரிய அரசால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் Samsung நிறுவனத்துக்கு பயன்படும் வகையில் சட்டங்களை அமைக்க, ஜனாதிபதியின் நண்பிக்கு $38 மில்லியன் பணம் வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
.