தென்சீன கடலை நோக்கி பிரித்தானிய யுத்த கப்பல்கள்

தென்சீன கடலை நோக்கி பிரித்தானிய யுத்த கப்பல்கள்

தென்சீன கடலை நோக்கி பிரித்தானியாவின் 65,000 எடைகொண்ட HMS Queen Elizabeth என்ற புதிய விமானம் தாங்கி கப்பலுடன் பெரும் தொகையான யுத்த கப்பல்கள் செல்லவுள்ளன. சீனாவுக்கு எதிராக பிரித்தானியாவின் பலத்தை காண்பிப்பதே இந்த படையெடுப்பின் பிரதான நோக்கம்.

1982ம் ஆண்டு இடம்பெற்ற Falklands War யுத்தத்துக்கு பின் பிரித்தானியா அனுப்பும் மிகப்பெரிய கப்பல் படையணி இதுவே.

HMS Queen Elizabeth விமானம் தாங்கி கப்பலுடன் கூடவே HMS Defender, HMS Diamond, HMS Kent, HMS Richmond, Fort Victoria, Tidespring ஆகிய யுத்த கப்பல்களும், Astute வகை நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் செல்லும்.

அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள இந்த பயணம் சுமார் ஒரு மாதம் இடம்பெறும்.

அமெரிக்காவின் USS The Sullivans, நெதர்லாந்தின் HNLMS Evertse ஆகியன யுத்த கப்பல்களும் இடையில் பிரித்தானிய அணியுடன் இணையும்.

இந்த கப்பல் அணி தனது 48,000 km பயண காலத்தில் மொத்தம் 40 நாடுகளுக்கு செல்லும். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து, ஆகியன அவற்றுள் சில.