தென்னாசிய பொருளாதாரம் 40 வருட வீழ்ச்சியில்

SriLanka

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகள் உட்பட 8 நாடுகளை கொண்ட தென் ஆசிய நாடுகள் கடந்த 40 வருடங்களில் நிகழும் அதிகூடிய பொருளாதார மந்த நிலையை இந்த வர்த்தக ஆண்டில் அடையும் என்று உலக வங்கி (World Bank) இன்று ஞாயிறு தெரிவித்து உள்ளது.
.
சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தென் ஆசிய நாடுகள் 6.3% பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி கூறி இருந்தாலும், கொரோனா வரைஸ் காரணமாக மேற்படி நாடுகள் 1.8% முதல் 2.8% வரையான வளர்ச்சியை மட்டுமே அடையும் என்கிறது உலக வங்கி.
.
இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், பங்களாதேசம் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிக குறைவாக அமையவுள்ள  வேளை, பாகிஸ்தான், ஆப்கானித்தான், மாலைதீவு ஆகிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியே காணப்படும் என்கிறது உலக வங்கி.
.
இந்த வருடம் ஏற்படும் பொருளாதார மந்த நிலை 2021 ஆம் ஆண்டு வரை தொடரும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
.
கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபட இந்தியா $23 பில்லியன் முதலீடுகளை செய்யவுள்ளதாக அறிவித்து உள்ளது… பாகிஸ்தான் $6 பில்லியன் செலவிட உள்ளதாக அறிவித்து உள்ளது.
.