தென் ஆபிரிக்காவில் தண்ணீர் பஞ்சம், ஆளுக்கு 25 லீட்டர்

SouthAfrica

கடந்த சில மாதங்களாக தென் ஆபிரிக்காவின் Cape Town நகரில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு தண்ணீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாடு மேலும் உக்கிரம் அடையும்.
.
போதிய மழை இன்மை, தரமான நீர் பயன்பாட்டு கொள்கை இன்மை, அதீத வெப்பம் போன்ற காரணங்களால் Cape Town நகரம் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆளுக்கு 50 லீட்டர் நீர் என்ற கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால் தற்போது கைவசம் உள்ள நீர் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையே போதுமானதாகும்.
.
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் அந்த நகரம் எங்கும் 200 நீர் நிலையங்கள் அமைத்து, ஆளுக்கு 25 லீட்டர் நீர் மட்டும் வழங்கப்படும்.
.

அங்குள்ள Theewaterskloof அணை 20% நீரை மட்டுமே தற்போது கொண்டுள்ளது. ஏனைய நீர் அணைகளும், குளங்களும் இவ்வாறு மிக குறைந்த அளவு நீரையே கொண்டுள்ளன.
.