அமெரிக்காவின் mid-term தேர்தலுக்கு 4 கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் சனாதிபதி ரம்பும், அவரின் Republican கட்சியும் அமெரிக்க காங்கிரசில் பலத்தை இழக்கலாம் என்று Republican கட்சி செய்த இரகசிய கருத்து கணிப்பு கூறுகிறது.
காங்கிரசின் House சபையை மட்டும் எதிரணியான Democratic கட்சி வென்றால் ரம்ப் தான் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியாது இருக்கும். ரம்பின் முயற்சிகளை House தடுக்கலாம். காங்கிரஸ் பணத்தை வழங்கினால் மட்டுமே வெள்ளை மாளிகை அதை செலவு செய்யலாம்.
ஆனால் காங்கிரசின் House, Senate இரண்டையும் Democratic கட்சி வென்றால் அது ரம்புக்கு ஆபத்தாக அமையலாம். இரண்டு சபைகளும் இணைந்து ரம்பை தண்டிக்கலாம், பதவியை பறிக்கலாம்.
சில Republican கட்சியினர் Democrats சுமார் 30 மேலதிக House ஆசனங்களை பெறலாம் என்று கருதுகின்றனர். தற்போது House, Senate இரண்டும் ரம்பின் Republican கட்சியினர் கைகளில் உள்ளன.
வழமையாக Republican கோட்டைகள் என்று கருதப்படும் Texas, Oklahoma, Alabama போன்ற மாநிலங்களிலும் இம்முறை Republican கட்சி பலத்த எதிர்ப்பை சந்திக்கிறது. அதனால் இந்த மாநிலங்களில் இழக்கும் ஆதரவை மீண்டும் திரட்ட ரம்ப் அங்கெல்லாம் பரப்புரை செய்ய பயணிக்கிறார்.
