தொடரும் ஐரோப்பிய ஆர்ப்பாட்டங்கள், பிரான்சில் உக்கிரம்

தொடரும் ஐரோப்பிய ஆர்ப்பாட்டங்கள், பிரான்சில் உக்கிரம்

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், இத்தாலி, அல்பேனியா ஆகியவற்றில் இளைஞர் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. ஆனால் பிரான்சில், குறிப்பாக பாரிஸில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறி உள்ளன.

பாரிஸ், Marseille ஆகிய நகரங்களில் சுமார் 410,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக அரசு கூறியுள்ளது. ஆனால் இத்தொகை 1  மில்லியன் என்கின்றன தொழிலாளர் சங்கங்கள்.

ஆரம்பத்தில் மாணவர் ஆர்பாட்டங்களாக ஆரம்பித்த இந்த கிளர்ச்சிகள் தற்போது அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற விசயங்களையும் உள்ளடக்குகின்றன.

பாரிஸின் தென் பகுதியில் சனிக்கிழமை சுமார் 110,000 பேர் வன்முறை இன்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் சனி இரவு சுமார் 500 பேர் தமது முகங்களை மூடி கடையுடைப்பு, தீ வைப்பு போன்ற வன்முறைகளில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.

பாரிஸில் 70,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் 20 க்கும் மேலான metro ரயில் சேவை நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.