தொடரும் கலிபோர்னியா பகுதி நீர் தட்டுப்பாடு

தொடரும் கலிபோர்னியா பகுதி நீர் தட்டுப்பாடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை அண்டிய தென் மேற்கு பகுதி தொடர்ந்தும் நீர் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி வருகிறது. அடுத்த ஆண்டில் இப்பகுதி Tier 2 அளவிலான நீர் தட்டுப்பாட்டை அடையலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. Tier 0, Tier 1, Tier 2, Tier 3 ஆகிய அளவீடுகள் இப்பகுதிக்கு நீர் வழங்கும் மீட் வாவி (Lake Mead) என்ற Hoover Dam அணையை கட்டி தேக்கிய நீரின் அளவில் தங்கி உள்ளன.

மீட் அணைக்கட்டு கொள்ளக்கூடிய அதிகூடிய நீர் மட்டத்தின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 1,229 அடி.  இந்த நீர் மட்டம் உயரம் 1,090 அடியாக தாழ்ந்த காலத்தில் Tier 0 எச்சரிக்கை விடப்பட்டது. 2021ம் ஆண்டு அந்த நீர் மட்டத்தின் உயரம் 1,075 அடியாக தாழ Tier 1 எச்சரிக்கை விடப்பட்டது. Tier 1 அளவு அணையில் 40% நீரை மட்டுமே கொண்டிருக்கும். மே மாதம் அணையில் 27% நீரே இருந்துள்ளது.

2023ம் ஆண்டில் இந்த நீர் மட்டத்தை உயரம் 1,045 அடியாக தாழும் என்றும் அது Tier 2 எச்சரிக்கைக்கு உட்படும் என்றும் தற்போது கூறப்பட்டு உள்ளது. Tier 2 அளவு கடுமையான நீர் பாவனை கட்டுப்பாடுகளை நடைமுறை செய்ய வைக்கும். இந்த அணைகளின் கீழ்மட்டம் ஒடுங்கி செல்வதால், நீர் மட்டம் குறைய அதில் உள்ள நீரின் கனவளவு மிக வேகமாக குறையும்.

Tier 2 தட்டுப்பாடு வரும்போது நீர் பாவனை 25% ஆல் குறைக்கப்படும்.அவ்வகை கட்டுப்பாடு மக்களை, தொழிற்சாலைகளை, விவசாயத்தை வேறு இடங்களுக்கு நகர வைக்கும்.

1935ம் ஆண்டு Colorado ஆற்றை மறித்து கட்டப்பட்ட Hoover Dam உருவாக்கிய Lake Mead அணை Los Angeles, Las Vegas, San Diago, Phoenix, Tucson, மற்றும் சில மெக்ஸிகோ நாட்டு நகரங்களில் வாழும் 40 மில்லியன் மக்களுக்கு, விவசாயத்துக்கு, தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்குகிறது. இயற்கையில் வனாந்தரமாக இருந்த பகுதிகள் அணை நீரால் நகரங்கள் ஆகின. தற்போது அந்த நகரங்களுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

Colorado ஆற்றின் மேல் பகுதில் 1960ம் ஆண்டில் கட்டப்பட்ட Glen Canyon Dam என்ற அணையிலும் நீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.

Lake Mead, Lake Powell ஆகிய இரண்டும் Arizona, California, Colorado, Nevada, New Mexico ஆகிய மாநிலங்களுக்கு நீர் வழங்குகின்றன.

நீர்மட்டம் தாழ்ந்து அடிப்பகுதி சில இடங்களில் தெரிவதால் இதுவரை குறைந்தது 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை 1970 களில் அல்லது 1980 களில் சுட்டு கொலை செய்யப்பட்டு எறிந்த உடல்களாக இருக்கலாம் என்று போலீஸ் கூறுகிறது.